ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கும் படத்தின் அப்டேட்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-10-09 13:50 GMT

சென்னை,

நடிகர் நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்குனர் ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் டைட்டில் வருகிற அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு 'ஏழு கடல் ஏழு மலை' என்று பெயரிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்