'வேட்டையன்' படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்த துஷாரா விஜயன்

'வேட்டையன்' படத்தில் நடிகை துஷாரா விஜயன் ரஜினியுடன் இணைந்து நடித்த சுவாரசிய சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.;

Update:2024-08-11 11:36 IST

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. இந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நடிகை துஷாரா விஜயன் ரஜினியுடன் இணைந்து நடித்த சுவாரசிய சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, 'வேட்டையன்' படத்தின் முதல் காட்சி படப்பிடிப்பில் ரஜினி சாருடன் நடிக்க இருக்கும் போது, அதற்கு முந்தைய நாள் எனக்கு காய்ச்சலே வரும் போல் ஆகிவிட்டது, அவருடன் இணைந்து நடித்தது எனக்கு கனவு மாதிரி இருந்தது. மேலும் இந்த படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது, பகத் பாசில் போன்ற சிறந்த நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை எனக்கு 'வேட்டையன்' படம் பெற்று கொடுத்துள்ளது என்று கூறினார்.

இதற்கிடையில், நடிகர் விக்ரம் நடிக்கும் 'வீரா தீரா சூரா' படத்தில் கதாநாயகியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்