'தக் லைப்' படம்... சிம்புவின் இன்ஸ்டா பதிவு வைரல்
'தக் லைப்' படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.;
சென்னை,
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஜெய்சால்மர் மற்றும் புதுடெல்லி போன்ற இடங்களில் நடைபெற்றது. 'தக் லைப்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்றது. இதற்கிடையில் நடிகர் சிம்பு ஏற்கனவே டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.
இந்தநிலையில் தற்போது, நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'தக் லைப்' படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதை குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.