தனுஷ் இயக்கும் மூன்றாவது படம்... வெளியான அப்டேட்..!
தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'ப.பாண்டி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். தொடர்ந்து தான் நடிக்கும் 50-வது படத்தையும் அவரே இயக்கி வருகிறார். இந்த நிலையில், தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'டிடி3' மற்றும் 24.12.23 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில் கடற்கரையில் காலியாக இருக்கும் பென்ச் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. படம் தொடர்பான வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த பிற தகவல்கள் வருகிற 24-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த திடீர் அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.