'கேப்டன் மில்லர்' படத்தின் முதல் பாடல் வெளியானது

'கேப்டன் மில்லர்' திரைப்படம் 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.;

Update:2023-11-22 17:45 IST

சென்னை, 

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. எனவே இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 'கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்' எனும் பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

மேலும் செய்திகள்