விஜய், அஜித் குறித்த கேள்வி.. யோசிக்காமல் ஒரே பதிலை சொன்ன வடிவேலு
மாமன்னன்' படத்துக்குப் பிறகு பகத் பாசிலுடன் இணைந்து 'மாரீசன்' என்ற படத்தில் வடிவேலு நடித்து வருகிறார்.;
மதுரை,
தனது காமெடியால் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் வடிவேலு. பின்பு ஹிரோவாகவும் நடித்து தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் 'வைகைப்புயல்' என்று அழைக்கப்படுகிறார்.
இவர் தற்போது மாமன்னன்' படத்துக்குப் பிறகு பகத் பாசிலுடன் இணைந்து 'மாரீசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டிருந்தார். விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டார் அவர் இடத்தை நீங்கள் நிரப்பிவீர்களா? என்ற கேள்விக்கு, வேற ஏதாவது பேசுவோமா என்றார். அஜித் கார் ரேஷிங் விபத்து குறித்த கேள்விக்கும் வேற ஏதாவது பேசுவோமா என்று யோசிக்காமல் ஒரே பதிலை கூறினார்.