பிரபல நடிகர் சினிமாவில் நடிக்க தடை நீங்கியது

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கி உள்ளது.;

Update: 2022-11-29 03:32 GMT

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் தனது, 'சட்டம்பி' படம் தொடர்பாக பேட்டி அளித்தபோது, ஒரு கேள்வியால் எரிச்சல் அடைந்து பெண்ணை ஆபாசமாக திட்டியதாக கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ரீநாத் மீது மராடு போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் ஸ்ரீநாத் மீது ஒரு பெண் பாலியல் புகாரும் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஸ்ரீநாத் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் ஸ்ரீநாத் படங்களில் நடிக்க தற்காலிக தடை விதித்தது. இதனால் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யாமல் அவரை ஒதுக்கினர். இந்த நிலையில் தற்போது ஸ்ரீநாத் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்