ரூ.50 கோடியை நெருங்கும் சூரியின் 'கருடன்' பட வசூல்!

நடிகர் சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளது.;

Update:2024-06-16 16:35 IST

சென்னை,

எதிர் நீச்சல்', 'காக்கிச் சட்டை', 'கொடி', 'பட்டாசு' படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் 'கருடன்'. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படம் வசூல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் கருடன். நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வணிக வெற்றியைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ.42 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கருடன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்