'என்னை பார்த்தால் கடுமையாக இருப்பதுபோல் தோன்றும் ஆனால்...' - நடிகை சோபிதா

சிறிய மகிழ்ச்சியான விஷயங்களுக்கெல்லாம் அதிக சந்தோஷப்படுவேன் என்று நடிகை சோபிதா கூறினார்.;

Update: 2024-05-07 21:34 GMT

image courtecy:instagram@sobhitad

சென்னை,

தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலா தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். மங்கிமேன் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

சோபிதா துலிபாலாவும், சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன. இருவரும் ரகசியமாக சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் சோபிதா துலிபாலா அளித்துள்ள பேட்டியில், "நான் எப்போதும் காதலில்தான் இருப்பேன். எனது வாழ்க்கையில் காதல் முக்கிய அங்கம் வகிப்பதாக உள்ளது.

என்னை பார்த்தால் கடுமையாக இருப்பதுபோல் தோன்றும். எனது எண்ணங்கள் சுதந்திரமாக இருக்கும் என்றும் நினைப்பார்கள். இதுவரை நான் செய்த கதாபாத்திரங்களும் அப்படிப்பட்டவைதான்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் இதற்கு மாறாகவே இருப்பேன். எப்போதும் மற்றவர்களை சார்ந்தே வாழ்கிறேன். சிறிய மகிழ்ச்சியான விஷயங்களுக்கெல்லாம் அதிக சந்தோஷப்படுவேன்.

எனது பார்வையில் தூய்மையான எமோஷன் என்றால் பக்திதான். இந்த உணர்வோடு பார்த்தால் ஈகோ இருக்காது. நான் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே தயங்கியது இல்லை. வித்தியாசமான கதைகள் கிடைத்தால் மொழியை பார்க்காமல் நடிப்பேன்'' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்