தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படம்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-17 12:32 GMT

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவண்ணன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்