ஜப்பானில் ரிலீசாகும் 'ஜவான்' திரைப்படம்

‘ஜவான்’ திரைப்படத்தை ஜப்பானில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-09-12 15:25 GMT

மும்பை,

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து கலக்கிருப்பார். 

இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீசில் கலக்கியது. 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1,143.59 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்தது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் ஷாருக்கான் வீடியோ பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில், ' 'ஜவான்' ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. அட்லியின் திறமை, தொலைநோக்கு பார்வை இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை. இந்தப் படத்தை உருவாக்க உழைத்த குழுவினருக்கு எனது அன்பை தெரிவித்துக்கொள்கிறேன். படத்தை இவ்வளவு அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி, '  என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜவான் திரைப்படத்தை ஜப்பானில் வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளனர். ஜப்பானில் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என அறிவித்து புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்