சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிக்’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.;

Update: 2023-01-21 17:15 GMT

சென்னை,

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'கிக்' படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்