உண்மை சம்பவம் கதையில் சாய்பல்லவி

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார்.;

Update:2023-09-29 12:53 IST
உண்மை சம்பவம் கதையில் சாய்பல்லவி

இதில் நாயகனாக நாகசைதன்யா நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே `லவ் ஸ்டோரி' என்ற வெற்றிப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாகசைதன்யாவுக்கு 23-வது படம்.

இந்த பிரமாண்ட படத்தில் `திறமையான சாய்பல்லவி' நடிக்கிறார் என்று படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். படத்தை சந்து மொண்டேடி டைரக்டு செய்கிறார். அல்லு அரவிந்த் வழங்க பன்னி வாசு தயாரிக்கிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகி உள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்