நடிகையின் காலின் கீழ் உட்கார்ந்து முத்தம் கொடுத்தது ஏன்...? டைரக்டரின் அடேங்கப்பா விளக்கம்...!
இயக்குநர் கொடுத்த விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள், காலில் முத்தம் கொடுத்ததற்கு இப்படி ஒரு விளக்கமா என கேட்டு வாய் பிளந்துள்ளனர்.;
சென்னை
டைரக்டர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் படு மோசமாக உருவாகி உள்ள லெஸ்பியன் திரைப்படமான டேஞ்சரஸ் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
எல்லை மீறும் டைரக்டர்...! விளம்பரத்திற்காக நடிகையின் காலில் உட்கார்ந்து பின்னர் முத்தம் வேறு...!
டேஞ்சரஸ் பட நடிகைகளான நைனா கங்குலி மற்றும் அப்சரா ராணியுடன் ஏகப்பட்ட நைட் பார்ட்டிகளை முடித்த நிலையில், பிக் பாஸ் தெலுங்கு பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் போட்டோவை வெளியிட்ட ராம் கோபால் வர்மா, இவரது உடலில் ஆபத்தான குறியீடு எங்கே என்பதை கேட்பது போல கேமராவைப் பார்த்து சைக்கோ லுக்கில் போஸ் கொடுப்பது போன்ற ஆபாசமான செய்கை ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
தனது படத்தை விளம்பரப்படுத்த ராமு இப்படி ஒரு செயலைச் செய்ததால் அந்த இயக்குனரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவில், டேஞ்சரஸ் படத்தின் நடிகை ஆஷு ரெட்டிக்கு ராம் கோபால் வர்மா கால் மசாஜ் செய்கிறார்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், படத்தை விளம்பரப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வதை பார்க்கும் போது அசிங்கமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த ராம்கோபால் வர்மா இப்படி மோசமாக நடந்து கொண்டது வருத்தை அளிக்கிறது என்றும், எதிர்காலத்தில் ஸ்பா மற்றும் மசாஜ் தெரபியை தொடங்க ஐடியா ஏதாவது இருக்கிறதா என்றும் மடக்கி மடங்கி கேள்வி கேட்டு வருகின்றனர்.
இணையத்தில், தாறுமாறாக வரும் விமர்சனத்திற்கு டுவிட்டரில் விளக்கம் கொடுத்த ராம் கோபால் வர்மா, நடிகை அப்சரா ராணி மீது நாய் அமர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்து. நடிகை அஷுரெட்டியின் காலடியில் அமர்ந்திருந்தபோது அப்சரா ராணியின் நாய் தான் நினைவுக்கு வந்தது என்றும், காலுக்கு முத்தம் கொடுப்பதை அப்சராவின் நாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
ராம்கோபாலின் இந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு இப்படி ஒரு மோசமான விளக்கமா என கேட்டு நொந்து போனார்கள்.