ரஜினிகாந்த் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார்.. அருணாச்சலம் சூட்டிங்கில் நடந்தது பற்றி ரம்பா பேட்டி
அருணாச்சலம் பட சூட்டிங்கின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த போது நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகளை ரம்பா பகிர்ந்துள்ளார்.
சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா, ரம்பா, விசு உள்ளிட்டோர் நடித்த படம் அருணாச்சலம். வசூலில் சக்கை போடு போட்டது. ரஜினியின் சினிமா கேரியரில் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாகவும் இந்தப் படம் அமைந்தது. இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் ரஜினி நடித்து இருப்பார். அருணாச்சலம் படத்தில் பணக்கார ரஜினியின் உதவியாளராக ரம்பா நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன நிலையில், அருணாச்சலம் படத்தில் நடித்த போது நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகளை ரம்பா பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் ரம்பா கூறியிருப்பதாவது:-
அருணாச்சலம் படம் சூட்டிங்கின் போது நான் பந்தம் படத்தில் சல்மான் கானுடன் சேர்ந்து நடித்து வந்தேன். ஐதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்றது. காலையில் ரஜினி சாரோட நடிப்பேன். மதியம் பந்தம் படத்தில் நடிப்பேன். அருணாச்சலம் செட்டில் நான் இருந்தபோது சல்மான் கானும், ஜாக்கி ஷ்ராபும் வந்தார்கள். ஜாக்கி ஷ்ராப் எனக்கு அண்ணன், சல்மான் கான் ஜோடி. அவங்க ரஜினி சாருக்கு வாழ்த்து தெரிவிக்க செட்டுக்கு வந்தாங்க. அவர் பெரிய ஹீரோ அல்லவா. பாம்பேயில் ஹக் பண்ணுவாங்க.
சல்மான் கான் வந்ததும் நான் ஹக் பண்ணினேன். ரஜினி சார் பார்த்துக்கிட்டே இருந்தார். அதன் பிறகு ரஜினி சாரிடம் பேசிவிட்டு அவங்க கிளம்பிட்டாங்க. அதன் பிறகு நான் சல்மான் கானை ஹக் செய்ததை ரஜினி சார் நடித்துக் காட்டினார். நார்த்தில் இருந்தால் ஹக் பண்ணுவீங்க. நாங்க வந்தா குட்மார்னிங் சார்னு சொல்லிட்டு புக் எடுத்து படிப்பீங்களானு சார் கேட்டார். அருணாச்சலம் செட்டில் மதியம் லைட்ஸ் ஆப் ஆச்சு. அப்போது யாரோ என் முதுகில் தட்டிவிட்டு போனது போல இருந்தது. உடனே கத்திவிட்டேன். லைட் மீண்டும் வந்தவுடன் ரம்பா பின்னாடி தட்டினது யாருடா என ரஜினி சாரே ஒரு பஞ்சாயத்து டிராமா போட்டார்.... அப்படித்தான் செட்டில் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார்" என்று கூறினார்.