'கல்கி 2898 ஏடி' ரூ.1,000 கோடி வசூல் - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ்

'கல்கி 2898 ஏடி' ரூ.1,000 கோடி வசூல் ஈட்ட உதவிய ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டு பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.;

Update:2024-07-16 11:30 IST

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.

கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், 15 நாட்களில் 1,000 கோடி ரூபாய் வசூலித்தது. இதனையடுத்து, ரூ.1,000 கோடி வசூல் ஈட்ட உதவிய ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

ரசிகர்களுக்கு வணக்கம். 'கல்கி 2898 ஏடி' படத்தை பெரிய அளவில் ஹிட் அடிக்க செய்ததற்கு நன்றி, மிக்க நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை. ஐந்து வருடங்களாக கடின உழைப்பை கொடுத்து இப்படத்தை உருவாக்கிய நாக் அஸ்வினுக்கும் தரமான படத்தை கொடுத்த தயாரிப்பாளருக்கும் நன்றி. அமிதாப்பச்சன், கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல விரும்புகிறேன். ரசிகர்களுக்கு மீண்டும் நன்றி. உங்களை மிகவும் நேசிக்கிறேன், இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்