உதவியாளர் திருமணத்தில் பங்கேற்ற ராஷ்மிகா..! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்

பிரகாசமான மஞ்சள் நிற புடவை அணிந்து வந்திருந்த ராஷ்மிகா மந்தனா மீதே அனைவரின் பார்வையும் இருந்தது.

Update: 2023-09-05 08:34 GMT

புஷ்பா திரைப்படத்தின் வெற்றியின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. அவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரைப் பார்க்க ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்துகிடக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தனது உதவியாளர் சாய் திருமண விழாவில் ராஷ்மிகா பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். மணமக்களுடன் உற்சாகமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பிரகாசமான மஞ்சள் நிற புடவை அணிந்து சிரித்தபடி வலம் வந்த ராஷ்மிகா மந்தனா மீதே அனைவரின் பார்வையும் இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்