படமாகும் வாழ்க்கை கதை: வாஜ்பாயாக நடிக்கும் பங்கஜ் திரிபாதி

முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.;

Update:2022-11-22 13:29 IST

அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் சினிமா படங்களாக வந்துள்ளன. பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முன்னாள் முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய்.ராஜசேகர ரெட்டி ஆகியோர் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன.

இந்த வரிசையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு 'தி அன்டோல்ட் வாஜ்பாய்' என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை படமாக்க உள்ளனர்.

வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வந்தது. தற்போது வாஜ்பாய் வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி தேர்வாகி உள்ளார். படப்பிடிப்பை விரைவில் தொடங்கி அடுத்த வருடம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். பங்கஜ் திரிபாதி தமிழில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்