நடிகையாக அல்ல...- ஏ.ஆர்.எம் படத்தில் இணைந்த மமிதா பைஜு?

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஏ.ஆர்.எம் படத்தில் மமிதா பைஜு இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2024-08-27 12:38 IST

திருவனந்தபுரம்,

மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொத்தாக அள்ளிய இளம் கதாநாயகி மமிதா பைஜுவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'ரெபல்' படத்திலும் நடித்தார். தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வருகிறார். இந்நிலையில் ஏ.ஆர்.எம் படத்தில் மமிதா பைஜு இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜித்தின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஏ.ஆர்.எம். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் 12-ம் தேதி தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது.

இந்த சூழலில், 'பிரேமலு' நடிகை மமிதா பைஜு இப்படத்தில் நடிகையாக இல்லாமல், டப்பிங் கலைஞராக படக்குழுவில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு மமிதா பைஜு டப்பிங் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்