கவர்ச்சி, முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.. நடிகை அம்மு அபிராமி

ஒரு இடத்துல நாம இருக்குறது ஆபத்துன்னு தெரிஞ்சா, அந்த இடத்த விட்டு நகர்ந்து போயிடுறதுதான் நல்லது என அம்மு அபிராமி கூறினார்.

Update: 2024-01-11 08:00 GMT

வளர்ந்து வரும் சினிமா நடிகைகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ள அம்மு அபிராமி, தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது சினிமா பயணம், சினிமாவில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து அளித்த பேட்டி வருமாறு:-

சின்ன வயசுலேயே டி.வி. நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன். அப்புறம் மைமிங், தியேட்டர் பிளேன்னு நடிக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா சினிமா ஆசை வந்துச்சு. அப்போதான் `ராட்சசன்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது.

`நிறங்கள் மூன்று' படத்துல நடிச்சுருக்கேன். `ஜம்மா' படத்துல நடிக்கிறேன். இளையராஜா சார் மியூசிக்ல படத்தோட இறுதிகட்ட பணி மும்முரமாக நடந்துட்டு இருக்கு. தமிழிலும், தெலுங்கிலும் இன்னும் சில படங்கள் நடிச்சுட்டு வரேன்.

படத்தின் கதை என்னை தாக்கணும். ஒரு ரசிகையா அந்தப் படத்தை நான் என்ஜாய் பண்ணனும். அந்தக் கதையில் என்னோட கேரக்டர் சவாலா இருக்கணும். அதை மனசுல வச்சு தான் கதைகளை செலக்ட் செய்வேன்.

கவர்ச்சியா நடிப்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது. அதேபோல `லிப் லாக்' (முத்தக்காட்சி) சீன்லயும் நடிக்க மாட்டேன். இது என்னோட கொள்கையாவே வச்சுருக்கேன். எப்படிப்பட்ட பெரிய படமா இருந்தாலும், கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த 2 விஷயத்திலும் சமரசம் பண்ணிக்கவே மாட்டேன்.

சினிமா மட்டுமில்லங்க... உலகத்துல எல்லா துறையிலும் பாலியல் பிரச்சினை இருக்கத்தான் செய்யுது. இதுல இன்னும் கொடுமை என்னன்னா... ஆண்களுக்கும் இந்த பிரச்சினை நடக்க ஆரம்பிச்சுடுச்சு... ஒரு இடத்துல நாம இருக்குறது ஆபத்துன்னு தெரிஞ்சா, அந்த இடத்த விட்டு நகர்ந்து போயிடுறதுதான் நல்லது. எனக்கு இதுவரை அப்படி பிரச்சினை வரலை.அந்த மாதிரி சூழ்நிலையையும் நான் இதுவரை அமைச்சுகிட்டது கிடையாது.

பிராணிகள், விலங்குகள் மீது ரொம்ப அன்பா இருப்பேன். வீட்லகூட நாய் வளர்க்குறேன். தெருவுல ஏதாவது நாய்களை பார்த்தாலே சாப்பாடு கொடுப்பேன். விலங்குகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வளவு அன்பு..

சினிமாவில் கவர்ச்சி காட்டுவது ஈசியான விஷயம் கிடையாது. அத்தனை பேர் முன்னாடி கவர்ச்சி காட்டி நடிக்கிறது சாதாரணமா? அதுக்கு நிறைய தன்னம்பிக்கை வேணும். எனக்கு அது இல்ல. தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடும் இல்ல. மத்தபடி அதை தப்பா பாக்கல. என்னை பொறுத்தவரை சாதாரணமா போய்க்கிட்டு இருக்குற ஒரு படத்துல திடீர்னு வர கிளாமர் பாட்டு தேவையில்லைங்கிறது என் கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்