'100 படங்களை கடந்துவிட்டேன், எனினும் ...' - இயக்குனர் போஸ் வெங்கட்

இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட் இதுவரை 100 படங்களை கடந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-12-26 04:43 GMT

சென்னை,

'மெட்டி ஒலி' தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். சின்னத்திரை தாண்டி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம்தூம், சிங்கம், ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விமல் நடிப்பில் 'சார்' படத்தை இயக்கி இருந்தார். கல்வியின் அவசியத்தையும் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இப்படம் பேசியுள்ளது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "100 படங்களை கடந்துவிட்டேன்.. எனினும் நம்மை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. 'கங்குவா, விடுதலை 2' ஆகிய படங்களில் நடிக்க நல் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சிவா சார் மற்றும் வெற்றிமாறன் சார் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்