கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தை வீட்டில் அமர்ந்தபடி சுகமாக காண ஓர் அரிய வாய்ப்பு
கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தை வீட்டில் அமர்ந்தபடி சுகமாக காண விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது அமேசான் பிரைம் வீடியோ;
கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தை மே மாதம் 16 தேதி முதல் வீட்டில் அமர்ந்தபடி சுகமாக காண விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது அமேசான் பிரைம் வீடியோ. டிஜிட்டல் சந்தா பெறுவதற்கு முன்பாகவே மூவி ரெண்டல் மூலம் இத்திரைப்படத்தை நம் வீட்டில் நமக்கு வசதியான நேரத்தில் பார்த்து மகிழலாம்.
அமேசான் பிரைம் வீடியோ என்பது உலகெங்கிலுமுள்ள பல அறிய, விருது வென்ற திரைப்படங்களையும் டிவி ஷோக்களையும், இந்திய திரைப்படங்களையும் உடனுக்குடன் நம் வீட்டில் நம் நேரத்திற்கேற்ப, கண்டு களிப்பதற்காக உதவும் ஒரு ஆப் ஆகும்.
அந்த வகையில் தற்போது அமேசான் பிரைம் வீடியோ மற்றுமொரு விரிவாக்கமாக மூவி ரெண்டல் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் இந்திய ரசிகர்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டிஜிட்டல் சந்தா உள்ள ரசிகர்களும், டிஜிட்டல் சந்தா இல்லாத ரசிகர்களும் மூவி ரெண்டல் மூலமாக இந்த படத்தை ரூபாய் 199 செலுத்தி பெற்று மகிழலாம். இந்தத் திரைப்படம் கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ரசிகர்களுக்கு கிடைக்கிறது. இத்திரைப்படத்தை தவிர பல முன்னணி இந்திய சினிமாக்களையும் உலக சினிமாக்களையும் மூவி ரெண்டல் மூலமாக பார்த்து மகிழ வாய்ப்பளிக்கிறது.
2018ஆம் ஆண்டு வெளிவந்த கேஜிஎப் சாப்டர் 1 திரைப்படம் எல்லோராலும் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாநாயகன் கோலார் தங்கச் சுரங்கத்தை தன் பிடியில் கொண்டு வந்து, பல பேர்களின் விரோதத்தை பல பக்கங்களிலிருந்தும் பெற்று அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை கூறுகிறது இத்திரைப்படம். நரச்சி மக்களின் ஆபத்பாந்தவனாக இருக்கிறார் ராக்கி. அதீரா, இணையத் கலீல் மற்றும் ரமிகா சென் போன்றோரினால் ஏற்படும் தடைகளை தன தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற எப்படி முறியடிக்கிறார் என்பதை மிகவும் சுவாரசியமாகவும், திகிலூட்டக்கூடிய வகையிலும் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்துள்ளார். மேலும் இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டன்டான், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், அச்யுத் குமார் மற்றும் அர்ச்சனா ஜோஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் இன் விஜய் கிரகண்தூர் தயாரித்துள்ளார்.
அமேசான் பிரைம் வீடியோவின் மூவி ரெண்டல் மூலம் திரைப்படத்தை வாடகைக்கு எடுத்தவர்கள் 30 நாட்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த படத்தை பார்க்கலாம். படத்தை பார்க்கத் துவங்கிய பின் நாற்பத்தி எட்டு மணி நேரம் வரை எப்பொழுது வேண்டுமானாலும் வசதிக்கேற்ப பார்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரைம் வீடியோ மூலம் நம் விருப்பத்திற்கேற்ப திரையரங்குகளில் வெளியிடப்படாத திரைப்படங்களை கூட நாம் பார்த்து மகிழலாம். கேஜிஎப் சாப்டர் 2 பிரைம் வீடியோவில் பார்க்க ரூபாய் 199 செலுத்தி primevideo.com மற்றும் பிரைம் வீடியோ ஆப் மூலமாக பெறலாம்.