'எஸ்எஸ்எம்பி29': அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்

இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.;

Update:2024-06-24 15:56 IST

மும்பை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதனை, இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, '

'இப்படத்தின் திரைக்கதையை ராஜமவுலி இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இந்த வாரம் இறுதியில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குபின் படத்திற்கான இசைப்பணி தொடங்கப்படும். தற்போது, சோதனை படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன,' இவ்வாறு கூறினார். 2027-ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்