'மெட்ரோ' சிரிஷ், பாபி சிம்ஹா நடித்துள்ள 'நான் வயலன்ஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
'நான் வயலன்ஸ்' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.;
சென்னை,
'மெட்ரோ' மற்றும் 'கோடியில் ஒருவன்' படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு 'நான் வயலன்ஸ்' (NonViolence) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'நான் வயலன்ஸ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் தங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.