ஆஸ்திரேலியாவில் மம்முட்டிக்கு தபால் தலை

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி. ஆகியோர் பங்கேற்று மம்முட்டி உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டனர்.;

Update:2023-10-19 08:45 IST

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் மம்முட்டிக்கு, ஆஸ்திரேலியாவில் கவுரவம் கிடைத்திருக்கிறது. மம்முட்டியின் கலை சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவரது சிறப்பு தபால் தலை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி. ஆகியோர் பங்கேற்று மம்முட்டி உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டு, இந்தியாவின் தலைமை கமிஷனர் மன்பிரீத் வோராவிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆண்ட்ரூ சார்டன் பேசும்போது, "மம்முட்டி இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடாக திகழ்கிறார். அவரது கலை சேவையை பாராட்டுகிறோம்'', என்று குறிப்பிட்டார்.

இந்த சிறப்பு தபால் தலை ஆஸ்திரேலியா நாட்டின் சந்தைக்கு உடனடியாக வந்தது. வரும் நாட்களில் தபால் சேவைகளில் இந்த தபால் தலைகள் பயன்படுத்தப்பட இருக்கிறது. இது மம்முட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்