மலையாள நடிகர் நெடும்பராம் கோபி மரணம்

பிரபல மலையாள நடிகர் நெடும்பராம் கோபி மரணம் அடைந்தார்.;

Update:2022-08-18 14:39 IST

பிரபல மலையாள நடிகர் நெடும்பராம் கோபி. இவர் பிளஸ்ஸி இயக்கத்தில் மம்முட்டி நடித்த காழ்ச்சா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் மம்முட்டியின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சுரேஷ் கோபியுடன் அஸ்வரூடன், காவ்யா மாதவனுடன் ஷீலாபதி ஆகிய படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். ஆப் த பீப்பிள், பார்த பீப்பிள் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக அலிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

நெடும்பராம் கோபிக்கு சில தினங்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நெடும்பராம் கோபி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. நெடும்பராம் கோபி மறைவுக்கு மலையாள நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்