திருப்பதி மலைப்பாதையில் நடந்து சென்று நடிகர் மகேஷ்பாபு சாமி தரிசனம்

திருப்பதி மலைப்பாதையில் நடந்து சென்று நடிகர் மகேஷ்பாபு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.;

Update:2024-08-15 16:27 IST

திருப்பதி,

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார். அலிப்பிரி நடப்பாதை வழியாக தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலைக்கு நடந்து வந்தார்.நடைபாதையில் வந்த பக்தர்கள் மகேஷ் பாபு மற்றும் குடும்பத்தினருடன் செல்பி எடுக்க போட்டி போட்டனர். இதனால் அலிபிரி நடைபாதையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நடைபாதைக்கு வந்து மகேஷ்பாபு குடும்பத்தினரை பத்திரமாக திருப்பதி மலைக்கு அழைத்துச் சென்றனர்.

மகேஷ் பாபு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இன்று காலை மகேஷ்பாபு குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவரை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்