என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டியில் குர்ச்சி மடத்தபெட்டி பாடலுக்கு குத்தாட்டம் - வீடியோ வைரல்
அமெரிக்காவின் ஹுஸ்டனில் என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன.;
வாஷிங்டன்,
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் 'குண்டூர் காரம்' திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தை 'அலா வைகுந்தபுரம்லூ' படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி இருந்தார். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
பேமிலி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த படத்தில் செண்ட்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த படத்தில் வரும் குர்ச்சி மடத்த பெட்டி பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது. பாடல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடந்து வரும் என்.பி.ஏ கூடைப்பந்து போட்டியின்போது நடனக்கலைஞர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அமெரிக்காவின் ஹுஸ்டனில் என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் ஹுஸ்டன் ராக்கெட் மற்றும் டல்லாஸ் மாவ்ரிக்ஸ் அணிகள் மோது ஆட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்டத்தின் இடைவெளியில் குர்ச்சி மடத்தபெட்டி பாடலுக்கு நடனக்கலைஞர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். இது குறித்தான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.