ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து லைட்மேன் உயிரிழப்பு..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவில் பணியில் ஈடுபட்டிருந்த லைட்மேன் 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.;

Update: 2023-01-18 07:44 GMT

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் ஏ.ஆர். பிலிம் சிட்டி (AR FilmCity) என்ற பெயரில் ஸ்டுடியோ உள்ளது. இங்கே ஒரு சில படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்திற்கான படப்பிடிப்புக்கு ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகிறது. இதற்காக சாலிகிராமத்தைச் சேர்ந்த லைட்மேன் குமார் (47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்பிற்காக லைட்மேன் குமார் இன்று காலை 40 அடி உயரத்திலிருந்து மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென கால் தடுக்கி மேலிருந்து கீழே தவறி விழுந்தார்.

உடனே அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் கொண்டுவந்த வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் லைட்மேன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்