எழுத்தாளர் எம்.கே. மணி மறைவுக்கு கமல் இரங்கல்!

எழுத்தாளர் எம்.கே. மணி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-07-16 11:49 GMT

சென்னை,

திரைக்கதையாசிரியரும் எழுத்தாளருமான எம்.கே.மணி காலமானார். சென்னையில் வாழ்ந்துவந்த எழுத்தாளர்  எம்.கே.மணி சிறுகதைகளால் இலக்கிய பரப்பில் கவனிக்கப்பட்டவர். சினிமா துறையிலும் நீண்ட காலம் திரைக்கதையாளராக பணியாற்றிவர். இவர் எழுத்தில், நடிகர் கதிர் நடித்து வெளியான சிகை திரைப்படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றது. உள்கடல், மேலும் நூறு படங்கள், எழும் சில ஆட்கள், பத்மராஜன் திரைக்கதைகள், எழும் சிறு பொறி பெருந் தீயாய் போன்ற கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜி படமொன்றில் திரைக்கதை பங்களிப்பை செய்தார். இறுதியாக, இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் வெளியான டெவில் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். சில இணையத் தொடர்களின் கதை விவாதங்களிலும் பங்கேற்றவர்.

சிறுநீரக கேளாறுக்காக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று (ஜூலை 15) சென்னையில் காலமானார். இவர் மறைவிற்கு எழுத்தாளர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர்  எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்