'சலார்' படத்தை 'கேம் ஆப் திரோன்சுடன்' ஒப்பிடும் 'கல்கி 2898 ஏடி'இயக்குனர்
சலார் படத்தை ஹாலிவுட் திரைப்படமான 'கேம் ஆப் திரோன்சுடன்' ஒப்பிட்டு நாக் அஸ்வின் பேசியுள்ளார்.;
சென்னை,
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் 'சலார்'. இந்த படத்தை கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'சலார்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்நிலையில், 'கல்கி 2898 ஏடி'இயக்குனர் நாக் அஸ்வின் சலார் படத்தை ஹாலிவுட் திரைப்படமான 'கேம் ஆப் திரோன்சுடன்' ஒப்பிட்டு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "ஒரு பார்வையாளர் என்ற முறையில், நான் நிச்சயமாக சலாரின் இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கிறேன். நான் கேம் ஆப் திரோன்ஸ் ரசிகனும் கூட. அதை பார்க்கும்போது எனக்கு வேறொரு உலகம்போல் தோன்றியது. அதில், வெவ்வேறு வரலாறுகளை கொண்ட வெவ்வேறு வீடுகள் உள்ளன. சலாரிலும் நான் அதை உணர்ந்தேன். இதனால் நான் ஆர்வமாக உள்ளேன், என்றார்.