லியோவை முந்திய ஜெயிலர்... அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்ட கூகுள்...!

ஒவ்வொரு ஆண்டும் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.;

Update:2023-12-12 12:34 IST

சென்னை,

இணையத்தில் தகவல்களை தேடுவோருக்கு சர்ச் என்ஜின் எனப்படும் தேடுபொறி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வசதியை பல மென்பொருள் நிறுவனங்கள் வழங்கினாலும், ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பெயர்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2023ம் ஆண்டுக்கான அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த திரைப்படம் உலக அளவில் 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்திய அளவில் தேடப்பட்ட படங்களில் 2ம் இடத்தில் சன்னி தியோல் நடிப்பில் வெளியான 'கடார் 2', 3ம் இடத்தில் ஆங்கில படமான 'ஓபன் ஹெய்மர்', 4ம் இடத்தில பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'ஆதிபுருஷ்', 5ம் இடத்தில் ஷாருக்கான் நடித்த 'பதான்', 6ம் இடத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற 'ஜெயிலர்' படம் 7ம் இடத்தையும், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் 8ம் இடத்தையும் பெற்றுள்ளன. சல்மான் கான் நடிப்பில் வெளியான 'டைகர் 3' திரைப்படம் 9ம் இடத்தை பெற்றுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'வாரிசு' திரைப்படம் இந்த பட்டியலில் 10 வது இடத்தை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்