'அதற்கு காரணம் என் அம்மாதான்...' - நடிகை ஜான்வி கபூர் நெகிழ்ச்சி
எல்லோரும் என்னை ஒரு மகள்போல் பார்த்துக் கொள்கிறார்கள் என்று நடிகை ஜான்வி கபூர் கூறினார்.;
மும்பை,
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்துள்ளார். தேவரா என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி இருக்கிறார். அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்கிறார்.
இந்த நிலையில் மும்பையில் நடந்த பட நிகழ்ச்சியில் ஜான்வி கபூர் பேசும்போது, "என்னை பார்க்கும் எல்லோரும் உன் அம்மா ஸ்ரீதேவி மாதிரி அழகாக இருக்கிறாய். அவரது சாயலுடன் பிறந்து இருக்கிறாய் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் 'நியூ ஜெனரேஷன் ஸ்ரீதேவி' என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தெலுங்கில் தேவரா படப்பிடிப்பில் எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள கவுரவம்தான்.
எனது அம்மா நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருந்தவர். அவரது மகள் என்பதால் என்மீது எல்லோரும் காட்டும் பாசம் என்னை மெய்மறக்க செய்கிறது'' என்று சொல்லி நெகிழ்ந்தார்.