'இந்தியன் 2' - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

’இந்தியன் 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.;

Update:2024-07-13 08:43 IST

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் இயக்கிய எந்திரன், இந்தியன், அந்நியன், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது இவர், 'இந்தியன் 2' படத்தை இயக்கியுள்ளார். இதில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் போன்றோர் நடித்திருக்கின்றனர்.

'இந்தியன் 2' திரைப்படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியானது. இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வகையில் விமர்சனங்களை பெறவில்லை. இருந்தாலும், கமலின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி,

இப்படம், இந்தியா முழுவதும் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. தமிழில் ரூ.17 கோடியும், தெலுங்கில் ரூ.7.9 கோடியும், இந்தியில் 1.1 கோடியும் வசூலித்துள்ளது. முன்னதாக, கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' ரூ.32 கோடியும், சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 ஏடி' ரூ. 95 கோடியும் முதல் நாளில் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்