இளவரசர் ஆதித்த கரிகாலனாக விக்ரம் மாறியது எப்படி? - 'பொன்னியின் செல்வன்' படக்குழு வெளியிட்ட வீடியோ

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'ஆதித்த கரிகாலன்' கதாப்பாத்திரத்தின் தோற்றம் வடிவமைக்கப்பட்டது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2023-03-23 16:12 GMT

சென்னை,

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'பொன்னியின் செல்வன் 2-ம் பாகம்' வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் - 2 படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள 'ஆதித்த கரிகாலன்' கதாப்பாத்திரத்தின் தோற்றம் வடிவமைக்கப்பட்டது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்