வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் காலமானார்
வெண்ணிலா கபடி குழு திரைப்படப் புகழ் நடிகர் 'ஹரி வைரவன்' உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.;
சென்னை,
நடிகர் ஹரிவைரவன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், நள்ளிரவு 12.15 மணியளவில் உயிரிழந்ததாக நடிகர் அம்பானி சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவரது டுவிட்டரில், "வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் "ஹரி வைரவன் " இன்று காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று அதில் அம்பானி சங்கர் பதிவிட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த ஹரிவைரவன் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் நடிகர் ஹரி வைரவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.