கணவர் வீட்டில் அல்வா செய்த நடிகை ஹன்சிகா
காதல் கணவருக்காக முதல் முறையாக சமையல் அறைக்கு சென்று அல்வா செய்து கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா.;
தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால் உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட கால நண்பரும் தொழில் அதிபருமான சோஹைல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஜெய்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மும்பையில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்று குடியேறி உள்ளார் ஹன்சிகா. அங்கு நடிகை என்பதை மறந்து சாதாரண குடும்ப தலைவியாக மாறி வீட்டு வேலைகளை செய்தார். அதோடு காதல் கணவருக்காக முதல் முறையாக சமையல் அறைக்கு சென்று அல்வா செய்து கொடுத்துள்ளார். அந்த அல்வாவை சாப்பிட்ட சோஹைல் கதுரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹன்சிகா அல்வா செய்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவை பாராட்டி வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் திருமணம் ஆனதுமே கணவருக்கு அல்வாவா? என்று கேலி செய்தும் பதிவிட்டுள்ளனர்.