என் பெயரில் போலி கணக்கு: இன்ஸ்டாவில் தகவல் தெரிவித்த ஷாலினி அஜித்குமார்

போலியான எக்ஸ் பக்கத்தை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர்.;

Update:2024-06-03 21:26 IST

சென்னை,

மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடா முயற்சி" படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் அஜித்குமார் நடித்து வருகிறார். அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் தருவார்.

இந்நிலையில், எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது. தயவு செய்து யாரும் அதனை பின் தொடர் வேண்டாம் என்று ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போலியான எக்ஸ் பக்கத்தை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்