கவர்ச்சியில் கலக்கும் துஷாரா

‘சார்பட்டா' படத்தின் கதாநாயகி துஷாரா விஜயன் தனது கலக்கல் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.;

Update: 2022-09-20 02:01 GMT

'சார்பட்டா' படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் துஷாரா விஜயன். படத்தில் இவர் துடுக்காக பேசும் வசனங்களும், அதிரிபுதிரியான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

'சார்பட்டா' படத்தில் அடக்கஒடுக்கமான பெண்ணாக நடித்த துஷாராவுக்கு, எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று துஷாரா அறிவித்துள்ளார்.

முதல்கட்டமாக தனது கலக்கல் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் துஷாரா வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட நீச்சல் குளத்தில் கவர்ச்சியில் கலக்கும் தனது புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

'இப்போதாவது துஷாராவுக்கு உலகம் புரிந்ததே...' என்று திரையுலகினர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்