துல்கர் சல்மான் படத்தின் டீசரை வெளியிடும் சிம்பு..!

'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசரை பல்வேறு மொழிகளில் வெளியிடவுள்ள பிரபலங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2023-06-26 18:06 GMT

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் அதனை பல்வேறு மொழிகளில் வெளியிடவுள்ள பிரபலங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்புவும் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபுவும் கன்னட டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்