துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் - தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியை எச்சரித்த சின்மயி
அர்ச்சனாவின் பதிவுக்கு, பாடகி சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து கமென்ட் பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டூ' பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாடகி சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் கவிஞர் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனாவை எச்சரித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் அர்ச்சனா. இவர் சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார்.
இந்த நிலையில் அர்ச்சனாவின் அந்தப் பதிவுக்கு, பாடகி சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து கமென்ட் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.