70-வது தேசிய திரைப்பட விருது : நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்

தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வாகியுள்ள நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2024-08-16 18:25 IST

சென்னை,

70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்கள், நடிகைகள், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த பின்னணி இசைக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 7வது தேசிய விருதை பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பெறுகிறார் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான்.

சிறந்த நடனத்திற்காக, தமிழ் படமான திருச்சிற்றம்பலம் படத்தின் `மேகம் கருக்காதா' பாடலுக்காக நடன இயக்குநர்கள் ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன் சிறந்த நடிகையாக தேர்வாகியுள்ளார். சிறந்த நடிகை விருதை வென்ற நடிகை நித்யா மேனனுக்கு எக்ஸ் தளத்தில் நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7வது தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் - அனிருத் இணைந்து பாடியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்