நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது
பிரபல மலையாள நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கவுரவித்தார்.;
திருவனந்தபுரம்,
பிரபல மலையாள நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கவுரவித்தார்.
கேரள மாநில விவசாயத் துறை சார்பில் திருவனந்தபுரத்தில் விவசாய தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த விவசாயி என்ற விருதினை நடிகர் ஜெயராமுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வழங்கி கவுரவித்தார்.
எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் ஐந்தரை ஏக்கர் நிலத்தில், ஆனந்த் பண்ணை என்ற பெயரில் ஜெயராம் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு பண்ணையை நடத்தி வருகிறார். அறுபதுக்கும் மேற்பட்ட பசுக்களை தன் பண்ணையில் வளர்த்து வருகிறார். இவரது விவசாய பணிகளை பாராட்டி கேரள மாநில அரசு இந்த விருதை வழங்கி கவுரவித்துள்ளது.