அர்ஜுன் உறவினரின் பான் இந்தியா படம்

துருவா சார்ஜா நடித்துள்ள `கேடி த டெவில்' என்ற படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிறது.;

Update: 2022-10-28 06:52 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த அர்ஜுனின் அக்காள் மகன் துருவா சார்ஜா கன்னட படங்களில் நடித்துக்கொண்டே தமிழ் திரையலகிலும் கால் பதிக்க முனைப்பு காட்டுகிறார். ஏற்கனவே அவர் நடித்த கன்னட படமொன்றை `செம திமிரு' என்ற பெயரில் தமிழிலும் வெளியிட்டனர். இப்போது துருவா சார்ஜா நடித்துள்ள `கேடி த டெவில்' என்ற படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிறது. ஏற்கனவே கே.ஜி.எப்., காந்தாரா ஆகிய கன்னட படங்கள் இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் இதில் இந்தி நடிகர் சஞ்சய்தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பிரேம் இயக்கி உள்ளார். படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். துருவா சார்ஜா கூறும்போது கேடி த டெவில் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றார். இந்தப் படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்