வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் கவர்ச்சி புகைப்படங்கள்
ஐஸ்வர்யா ராஜேஷின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் டியர். இப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தற்போது, கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவருகிறார். இப்படத்தை ரோஹித் படக்கி இயக்குகிறார். இந்த படம் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், சமீபகாலமாக குடும்ப பாங்காக நடித்து வந்த பல நடிகைகள் கவர்ச்சிக்கு மாறி வருகிறார்கள். இதில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளார்.
கவர்ச்சி புகைப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனைப்பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியாக நடிக்க தயாராகி விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது 6 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.