நடிப்பை எனது பெற்றோர் மரியாதைக்குரிய தொழிலாக பார்க்கவில்லை - ஐஸ்வர்யா லட்சுமி

விஷாலின் ஆக்‌ஷன், தனுஷ் ஜோடியாக ஜெகமே தந்திரம், ஆர்யாவுடன் கேப்டன், விஷ்ணு விஷால் ஜோடியாக கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

Update: 2023-06-05 07:00 GMT

திருவனந்தபுரம்

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

விஷாலின் ஆக்ஷன், தனுஷ் ஜோடியாக ஜெகமே தந்திரம், ஆர்யாவுடன் கேப்டன், விஷ்ணு விஷால் ஜோடியாக கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து இவர் நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கதாநாயகியாக மட்டுமின்றி, சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். சாய் பல்லவி நடித்த 'கார்கி' படத்தை தயாரித்து உள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி தற்போது துல்கர் சல்மானுடன் கிங் ஆப் கோத்தா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது:-

நான் நடிகை ஆவதற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகப் பயிற்சி எடுக்கும் போதே நடிகையானேன். சினிமா குறித்து எனது பெற்றோருக்கு எதிர்மறையான கருத்து உள்ளது. வெளியில் பார்த்ததையும் கேட்டதையும் வைத்து படம் குறித்து எனக்கு மோசமான கருத்து உள்ளது.

நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக கருதவில்லை. என்னுடைய சினிமா வாழ்க்கை எனக்கு இன்னும் பிடிக்கவில்லை. எனது பார்வையில் சினிமாவில் தொடர்வது எளிதல்ல தினமும் அதற்காக போராட வேண்டும்.

பெண்களை மட்டுமே பிரதானமாகக் கொண்ட கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஆண்களும் பெண்களும் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு படம் என் பார்வையில் சமநிலையில் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி சினிமா என்பது சமூகத்தையும், நம் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்