குழந்தையுடன் தாய்லாந்து சென்ற நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா ஓய்வு நேரங்களில் கணவர், குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார்.

Update: 2024-05-31 21:22 GMT

சென்னை,

டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாராவுக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி படங்கள் தயாரிக்கிறார். தொழில் அதிபராகவும் மாறி இருக்கிறார். ஓய்வு நேரங்களில் கணவர், குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார்.

தற்போது குடும்பத்துடன் தாய்லாந்து சென்று இருக்கிறார். அங்கு விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் இடங்களை சுற்றிப்பார்க்கும் புகைப்படங்களையும், குழந்தைகளை கொஞ்சி விளையாடும் படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதில் உயிர், உலக் இருவரும் எனது ஆன்மா, இதயம் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்