மருத்துவமனையில் ஷாலினி - மனைவியை பார்க்க அஜர்பைஜானில் இருந்து வந்த அஜித்

ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.;

Update:2024-07-03 15:55 IST

சென்னை,

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக உள்ளனர். இந்நிலையில், ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் ஷாலினி, மருத்துவமனை கவுன் அணிந்து அஜித்குமாரின் கையை பிடித்தபடி இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், ஷாலினி விரைவில் குணமடைய வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் அஜர்பைஜானில் தனது 'விடா முயற்சி' படப்பிடிப்பில் இருந்து மனைவியை கவனித்து கொள்ள சென்னை திரும்பியுள்ளார். விரைவில் ஷாலினிக்கு குணமானதும் மீண்டும் படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்