அயோத்தியில் உள்ள ஹனுமன்கர்கி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

அயோத்தியில் உள்ள ஹனுமன்கர்கி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-08-20 10:32 GMT

லக்னோ,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது.

இதனிடையே, இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று உத்தரபிரதேச துணை முதல்-மந்திரியுடன் ரஜினி 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்தார். பின்னர் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை ரஜினி சந்தித்தார். இந்த நிலையில் இன்று உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் , சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து ரஜினி அயோத்தி சென்றார். அயோத்தியில் உள்ள ஹனுமன்கர்கி கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

ஹனுமன்கர்கி கோயிலில் பிரார்த்தனை செய்த பிறகு, ரஜினி கூறுகையில்,

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, நான் எப்போதும் இங்கு செல்ல விரும்புவேன். என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்