ரசிகர் மரணம் - குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
ரசிகரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் ஜெயம் ரவி ஆறுதல் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
பின்னர், அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் சைரன். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஜெயம் ரவி, 'ஜீனி' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகர் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் ராஜா(33). இவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் ஜெயம் ரவி ஆறுதல் கூறியுள்ளார்.